திண்டிவனம்: திண்டிவனத்திற்கு வந்திருந்த அய்யப்ப தர்ம பிரசார ரத யாத்திரைக்கு, புரோகிதர் சங்கம் மற்றும் பிராமணர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தின் விழுப்புரம் மாவட்டம் சார்பில், அய்யப்ப தர்ம பிரசார ரத யாத்திரை, கடந்த மாதம் 13ம் தேதி, சின்னசேலத்திலிருந்து புறப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு செல்கிறது.நேற்று பிற்பகல் திண்டிவனத்திற்கு வந்த ரத யாத்திரைக்கு, செஞ்சி சாலையில் உள்ள தரம் மோட்டார்ஸ் அருகே புரோகிதர் நல சங்கம் மற்றும் பிராமணர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், திண்டிவனம் புரோகிதர் நலச்சங்க துணைத் தலைவர் முருக்கேரி சீனுவாசஅய்யர், பிராமணர் சங்கத் தலைவர் தண்டபாணி, பொருளாளர் சீனு, இளைஞரணி தலைவர் நாகராஜ், மாங்காடு மணி மற்றும் தரம் மோட்டார்ஸ் ஜின்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.