பதிவு செய்த நாள்
21
ஏப்
2012
10:04
மூணாறு : மூணாறில் காளியம்மன்,கிருஷ்ணன்,நவ கிரக கோயில்களில் தேவபிரசன்னம் பரிகார சடங்குகள்,கலச அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று முதல் தொடங்கியது. மூணாறில் ஸ்ரீ காளியம்மன்,ஸ்ரீகிருஷ்ணன்,நவ கிரக கோயில்கள் ஒரே வளாகத்தில் உள்ளன. இங்கு தேவபிரசன்னம் பரிகார சடங்குகள்,கலச அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.கோதமங்கலம் அருகில் உள்ள நாகஞ்சேரியைச் சேர்ந்த கோயில் தந்திரி கோவிந்தன். நம்பூதிரி, பைய்யனூரைச் சேர்ந்த கோயில் சாந்தி குபேரன்நம்பூதிரி,அடிமாலியைச் சேர்ந்த கோயில் மேல்சாந்தி ஹரிகிருஷ்ணன்நம்பூதிரி ஆகியோர் தலைமையில் பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று நிர்மால்ய பூஜைகள்,மலர் நிவேதியம்,அஷ்டதிரவிய கணபதி ஹோமம் உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகளும்,அபிஷேகங்களும் நடந்தது.இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பாதுகாப்பு குழுவினர் செய்துள்ளனர்.