முக்தியாஜல ஈஸ்வரன் கோவிலில் 10ம் தேதி 1008 லிட்டர் நெய்தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08டிச 2019 03:12
திண்டிவனம்:பெருமுக்கல் சஞ்சீவி மலைமேல் உள்ள ஸ்ரீமுக்தியாஜல ஈஸ்வரன் கோவிலில் வரும் 10ம் தேதி 1008 லிட்டர் நெய் தீபம் ஏற்றப்படுகிறது. திண்டிவனம் அடுத்தபெருமுக்கல் கிராமத்தில் சஞ்சீவி மலைமேல் பிரசித்தி பெற்ற ஸ்ரீமுக்தியாஜல ஈஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு, முக்தியாஜல ஈஸ்வரர் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.இக்கோவிலில் ஆண்டுதோறும், கார்த்திகை தீப விழாவையொட்டி நெய் தீபம் ஏற்றப்படுவது வழக்கம், இந்த ஆண்டு வரும் 10ம் தேதி மாலை 6:00 மணிக்கு 7 அடி உயர கொப்பரையில் 1008 லிட்டர் நெய் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவில், சிவஜோதி மோனசித்தர் பங்கேற்கிறார்.ஏற்பாடுகளை பெருமுக்கல் கிராமத்தினர், திண்டிவனம் சிவனே சித்தன் குழு மற்றும் சிவனடியார் திருக்கூட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.