Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சமுக்தியாம்பிகைக்கு மானசாபிஷேக ... உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி விழா உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்: ஏற்பாடுகள் தயார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
11:12

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, 2688 அடி உயரமுள்ள மலை உச்சியில் கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு 2600 சிறப்பு பஸ்களும், 22 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

Default Image
Next News


ஏற்பாடுகள் தயார்: அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை, 2,668 அடி உயர மலைஉச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 1ல் தீப திருவிழா கொடியேற்றத்துன் தொடங்கியது. இதில் நாளை, பஞ்ச பூதங்கள் ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபமும், அனேகன், ஏகன் என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன.


மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் மஹா தீபம் ஏற்ற, 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணியால் ஆன, திரி தயார் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி முழுவதும், பல்வேறு வண்ணங்களில், ரோஜா, சாமந்தி, பூக்களால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோவில் வளாகம் முழுவதும், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. கோவில் வளாக கலையரங்கில், சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகளும், ஆன்மிக பாடல்கள் ஒலித்தவாறு விழா களை கட்டியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar