Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் திருக்கார்த்திகை திருவிழா பிரான்மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றம் பிரான்மலை உச்சியில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனி மாவட்டத்தில் கார்த்திகை தீப விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
தேனி மாவட்டத்தில் கார்த்திகை தீப விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

11 டிச
2019
01:12

தேனி: மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் திருக்கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேனி கருவேல்நாயக்கன்பட்டி பரமேஸ்வரன் கோயிலில் கார்த்திகை தீப விழா நடந்தது. நேற்று மாலை மலைக்கோயிலில் 40 கிலோ எடையுள்ள நெய் மூலம் தீபம் ஏற்றப்பட்டு, பரமசிவனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக  காலையில் நடந்த சிறப்பு பூஜையில் கருவேல்நாயக்கன்பட்டி, திருவள்ளுவர் காலனி, வாசுகி காலனி பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளைச்செயலாளர் ஜெயபாண்டியன், பொருளாளர் சகாதேவன், நிர்வாகிகள் செய்திருந்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோயிலில்  கார்த்திகை தீபத்திருவிழா நேற்று காலை விக்னஷே்வர பூஜையுடன் துவங்கியது. ரிஷப கொடியேற்றுதல், மகாதீபாரானை நடந்தது. மூலவர் பெரியநாயகி உடனுறை அம்மன் சிறப்பு அலங்காரத்திலும், கைலாசநாதர் ராஜஅலங்காரத்திலும், உற்சவர் ரிஷபவாகனத்திலும் காட்சியளித்தனர்.  அர்ச்சகர் ராஜா தலைமையில் பூஜை நடந்தது. அன்பர் பணி செய்யும் பராமரிப்புக்குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப், 500 கிலோ நெய் ஊற்றிய கொப்பறையில், மகா தீபம் ஏற்றினார். பெரியகுளம் நகராட்சி முன்னாள் தலைவர் ஓ.ராஜா, டாக்டர் ஆர்.முத்துகுகன், அன்பர் பணிக்குழு செயலாளர் சிவக்குமார், தென்மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அ.தி.மு.க.,  நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்டத்தின்  பல ஊர்களில் இருந்து பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீ குருதட்சிணாமூர்த்தி சேவா சங்கம் கவுரவ ஆலோசகர் சி.சரவணன், சித்ரா குடும்பத்தினர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பணிக்குழுவினர் செய்திருந்தனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

போடி: தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் போடி பரமசிவன் கோயிலில் கார்த்திகை தீப திருநாள்,  சிங்காரவேலன் பழநி பாதயாத்திரை குழு குருநாதர் சுருளிவேல் தலைமையில் நடந்தது. தலைவர் ஜெயராமன், செயலாளர் குமார், துணைத்தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். நகரில் இருந்து பார்த்தால் ஜோதி தெரியும் படி 171 கிலோ எடையுள்ள திரி மூலம் 702 லிட்டர் நெய் ஊற்றி அரோகரா கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது. சிவனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனையை சுந்தரம் குருக்கள் செய்திருந்தார். முருகன், லட்சுமி நாராயணனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். போடி அருகே பிச்சாங்கரை மலைப்பகுதியில் அமைந்துள்ள கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில், வினோபாஜிகாலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை  நடந்தது.  போடி சுப்பிரமணியர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கம்பம்: சுருளி அருவியில் ஆதி அண்ணாமலையார் கோயில் பிரசித்திபெற்றது. அருவிக்கு வரும் பக்தர்கள் இங்கு அண்ணாமலையாரை தரிசனம் செய்து செல்கின்றனர்.  நேற்று காலை கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக 20 லிட்டர் நெய் மற்றும் 30 லிட்டர் எண்ணெய் ஊற்றி கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் அன்னதானம் நடந்தது.  சிறப்பு அபிஷேக, ஆராதனையை சிவனடியார் முருகன் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாக்ராஜ்; உலகின் மிகப்பெரிய விழாவான மஹா கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள தசாஸ்வமேதகாட்டில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல்  திருவிழா நிறைவையொட்டி, ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடற்கரையில் புனித ... மேலும்
 
temple news
பொங்கல் பண்டிகையானது மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலிற்கு முதல்நாள் போகி பண்டிகை, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மார்கழி உற்ஸவ விழாக்கள் கணு உற்சவம், முத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar