முக்தியாஜல ஈஸ்வரன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2019 03:12
திண்டிவனம்: பெருமுக்கல் சஞ்சீவி மலைமேல் உள்ள முக்தியாஜல ஈஸ்வரன் கோவிலில் நேற்று தீப விழாவையொட்டி 1008 லிட்டர் நெய் தீபம் ஏற்றப்பட்டது. திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தில் சஞ்சீவி மலைமேல் பிரசித்தி பெற்ற முக்தியாஜல ஈஸ்வரன் கோவில் உள்ளது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நெய் தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.நேற்று கார்த்திகை தீப பெருவிழாவை முன்னிட்டு, மாலை 5:00 மணிக்கு, முக்தியாஜல ஈஸ்வரருக்கு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து முக்தியாஜல ஈஸ்வரர் விபூதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர், நந்தியின் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.மாலை 6:00 மணிக்கு,செத்தவரைசிவஜோதி மோனசித்தர், 1008 லிட்டர் நெய் கொண்ட 7 அடி உயர கொப்பரையில் கார்த்திகை மகா தீபத்தை ஏற்றி வைத்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலம் மயிலம் வள்ளி, தெய்வானை சுப்பரமணியர் சுவாமி கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு, சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு சங்குகண்ணர் மண்டபத்தின் மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு தேரடி வீதியில் சொக்கபானை ஏற்றப்பட்டது.