நடுவீரப்பட்டு:விலங்கல்பட்டு சுப்பரமணியர் கோவிலில் கார்த்திகை பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு சுப்ரமணியர் கோவிலில் அண்ணாமலையார் கார்த்திகை பூஜை நடந்தது.
இதை முன்னிட்டு நேற்று முன்தினம் (டிசம்., 10ல்) காலை 8:00 மணிக்கு சிறப்பு ஹோம பூஜை, 11:00 மணிக்கு விநாயகர், சுப்ரமணியர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 7:00 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 7:30 மணிக்கு கோவில் கோபுரத்தில் தீபம் ஏற்றப்பட்டது.