திருக்கார்த்திகை: ராமேஸ்வரம் கோயிலில் சொக்கப்பனைக்கு தீ
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2019 03:12
ராமேஸ்வரம்:திருக்கார்த்திகையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சொக்கப்பனைக்கு தீ மூட்டியதும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருக்கார்த்திகை தீப விழாவை யொட்டி நேற்று (டிசம்., 11ல்) ராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்பு கிழக்கு ரதவீதியில் இரு சொக்கப்பனை அமைத்தனர். நேற்று (டிசம்., 11ல்) இரவு சுவாமி, அம்மன் சன்னதியில் மகா தீபாராதனை முடிந்ததும், சொக்கப்பனைக்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை செய்து தீ மூட்டினார்.
பின் சொக்கப்பனையில் தீ எரிந்ததும் அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதில் கோயில் இணை ஆணையர் கல்யாணி, மேலாளர் முருகேசன், கண்காணிப்பாளர்கள் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைசெல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.