திருவண்ணாமலையில் அண்ணாமலையாரோடு பக்தர்கள் கிரிவலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12டிச 2019 04:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழா முடிந்ததை யொட்டி, உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் நேற்று கிரிவலம் வந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் 10ம் தேதி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீபத்திருவிழா முடிந்ததை யொட்டி, உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மற்றும் பராசக்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் கிரிவலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்களும் கிரிவலம் சென்று தரிசனம் செய்தனர். விழாவில் கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை பகுதியில் வெளிநாட்டு பக்தர்கள் தமிழில் சிவன் பக்திபாடல் பாடி வழிபாடு செய்தனர்.