பதிவு செய்த நாள்
13
டிச
2019
02:12
கடலுார்:சிதம்பரம், பரமேஸ்வரநல்லுார் பிரம்மராயர் கோவில் கும்பாபிஷேகம் யாக சாலை பூஜையுடன் இன்று 13ம் தேதி துவங்குகிறது.
சிதம்பரம், பரமேஸ்வரநல்லுார் பிரம்மராயர் எனும் ஆகாச சாஸ்தா கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று (13ம் தேதி) காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல் கால பூஜைகள் நடக்கிறது.நாளை 14ம் தேதி காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, 2ம் கால பூஜைகள் நடக்கிறது. வரும் 15ம் தேதி காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, தத்துவார்ச்சனை, மூலமந்திர ஹோமம், 10:00 மணிக்கு பரிவார யாக சாலை பூர்ணாஹூதி, 11:05 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 11:20 மணிக்கு கும்பாபிஷேகம், 12:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.விழாவில், அமைச்சர் சம்பத் தந்தை மேல்குமாரமங்கலம் சின்னசாமி குடும்பத்தினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலை வகிக்கின்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டாளர்கள், கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.