பதிவு செய்த நாள்
16
டிச
2019
12:12
சென்னை:நீலாங்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட, விஜயகணபதி கோவில் கும்பாபிஷேகத் தில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
நீலாங்கரை, சி.எல்.ஆர்.ஐ., நகர், ஆறாவது குறுக்கு தெருவில், விஜயகணபதி கோவில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. முதலாண்டு கும்பாபிஷேக விழா, 11ம் தேதி துவங்கியது. அன்று, பந்தக்கால் நட்டு, விக்னேஸ்வர பூஜை நடந்தது. 13ம் தேதி, முதல்கால பூஜையுடன் துவங்கி, மகா கணபதி பூஜை, மஹாலட்சுமி பூஜை, தனபூஜை நடந்தன.அதோடு, நீலாங்கரை செல்வ விநாயகர் கோவிலில் இருந்து, மேளத் தாளத்துடன், புனித தீர்த்தம், முளைப்பாகை எடுத்து வரப்பட்டது.நேற்று முன்தினம் (டிசம்., 14ல்), இரண்டாம் கால பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, புண்யாகவாஜனம், வேதிகார்சனம், அஸ்திர ஹோமம், விமான கலச ஸ்தாபனம், சுவாசினி பூஜை, தம்பதி பூஜை மற்றும் மூன்றாம் கால பூஜை நடைபெற்றன.
கடைசி நாளான நேற்று (டிசம்., 15ல்),, நான்காம் கால பூஜை துவங்கி, கோபூஜை, விஸ்வரூபம், வேதிகார் சனம், நாடி சந்தானம், மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம் கடம் புறப்பாடு நடை பெற்றன. இதை தொடர்ந்து, விஜயகணபதி விமான கும்பாபிஷேகம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்தி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங் கேற்றனர். இவ்விழாவில், தென்சென்னை தொகுதி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங் கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், சி.எல்.ஆர்.ஐ.,யை சேர்ந்த அதிகாரி கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இவ்விழாவை, விஜயகணபதி கோவில் அறக்கட்டளை நிர்வாகி கள் மற்றும் விழா குழுவினர் சேர்ந்து நடத்தினர்.