மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக நீர் தேக்கும் திட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2019 12:12
மதுரை: இந்தாண்டு வருண பகவான் கருணையால் மதுரை மாரியம்மன் தெப்பத்திற்கு வைகை நீர் 100 கன அடி வீதம் சென்று கொண்டிருக்கிறது. மாவட்ட, மாநகராட்சி, பொதுப்பணி, மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் இணைந்து நாற்பதாண்டு கனவை நிறைவேற்றியுள்ளன.
இத்தெப்பக்குளம் 1000 அடி நீளம், 1000 அடி அகலம், 30 அடி உயரம் கொண்டது. மன்னர் திரு மலை நாயக்கர் காலத்தில் வைகை நதியில் இருந்து பனையூர் கால்வாய் வழியாக தெப்பத் திற்கு நிரந்தரமாக தண்ணீர் நிரப்பப்பட்டது. ஆண்டு முழுவதும் தெப்பத்தில் தண்ணீர் நிரம்பி கடலாக காட்சியளித்தது. மரங்கள் சூழ்ந்த தெப்பத்தின் எழில் கொஞ்சும் மைய மண்டபம் அழகிற்கு மேலும் அழகு சேர்த்தது.
வைகை நீர் தெப்பத்தில் நேரடியாக கலக்காத வண்ணம் தெப்பத்தின் 16 கால் மண்டபம், முக்தீஸ்வரர் கோயில் அருகே தலா 30 அடி ஆழம் கொண்ட இரு மெகா தொட்டிகள் அமைக் கப் பட்டது. அங்கு வைகை நீர் சுத்திகரிக்கப்பட்ட பின் தெப்பத்தை அடையும். இதற்காக பனையூர் கால்வாயில் இருந்து தெப்பத்திற்கு பிரத்யேக கால்வாயும் அமைக்கப்பட்டது.
கைகொடுத்த பருவமழை: பராமரிப்பில்லாததால் கால்வாய்கள் துார்ந்தன. மழையின்றி தெப் பத்திற்கு வைகை நீர் செல்ல வில்லை. இந்தாண்டு பருவ மழை கைகொடுத்ததால் பெரியாறு, வைகை அணைகள் நிரம்பின. வைகை நீரை தெப்பத்திற்கு திருப்பி விட மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் வலியுறுத்தினர். கோயில் நிர்வாகம் சார்பில் குருவிக்காரன் ரோடு அருகே வைகையில் கிணறு அமைத்து நீரை பம்ப் செய்து தெப்பத்தில் நிரப்பினர்.
கடந்த இரு ஆண்டுகளாக நீர் நிரம்பிய தெப்பத்தில் தெப்பத்திருவிழா நடத்தப்பட்டது. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வைகை கரைகளில் ரோடு அமைப்பதால் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முடியவில்லை. வைகை கல்பாலம் அருகே கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து தெப்பத்திற்கு தண்ணீர் விட கோயில் நிர்வாகம் கூறியது.அதன்படி தடுப்பணையில் இருந்து பனையூர் கால்வாயை இணைக்க பொதுப்பணித்துறை வழிகாட்டுதல்படி ரூ.92 லட்சம் மதிப்பில் பிரத்யேக கால்வாய் அமைக்கப்பட்டது.
இதன் வழியாக வைகை நீர் பனையூர் கால்வாயில் தண்ணீர் விடப்பட்டது. கழிவுகள் வெளியே றும் வகையில் கால்வாயில் முதல் நான்கு மணி நேரம் நீர் விடப்பட்டது. அதன் பிறகு சுத்தி கரிப்பு கிணறுகளுக்கு விடப்பட்டது. அங்கு சுத்திகரிக்கப்பட்ட பின் தெப்பத்திற்குள் வினாடிக்கு 100 கன அடி வீதம் நீர் விழுகிறது. இருபது நாட்களில் 15 அடி வரை நீர் நிரம்ப வாய்ப்புள்ளது.