மூணாறு: மூணாறில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், 12ம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது.பழைய மூணாறில் உள்ள பார்வதியம்மன் கோயிலில் இருந்து பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மூணாறில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு அபிஷேகம் நடந்தது.
அதன்பின் பார்வதியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட ஐயப்பன், முருகன்,விநாயகர் ஆகியோ ரின் தேர் பவனி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வந்ததும் , சிறப்பு பூஜை, பஜனை நடந்தது. இரவில் ஐயப்ப பக்தர்கள் பூக்குழி இறங்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது.