அரச மணிமகுடத்தோடு நம்மை அரசாள்வார் என்று மாபெரும் எதிர்பார்ப்போடு காத்திருந் தோரின் கனவுகள் கலைக்கப்பட்டு, மெசியாவைப்பற்றி அவர்கள் கொண்டிருந்த தவறான கணிப்புகள் தவிடுபொடியாகுமாறு “இம்மானுவேல் ” கடவுள் நம்மோடு (மத்தேயு :1:23) என்று தன்னையே துயருறுவோடு அடையாளப்படுத்துபவராக நம்மில் ஒருவரானார்.
அரியணையில், அரசு மாளிகையில் வந்து பிறப்பார் எனக் காத்திருந்தோர் அவரை மாட்டுக் குடிலிலே பிறக்க செய்து இறை விருப்பம் வேறு, மனித விருப்பம் வேறு என்பதை மெய்ப் பித்தார் இறைவன். எங்கோ வீற்றிருந்து நம்மை ஆட்சி செய்வார் என்ற எண்ணத்தை மாற்றி நம்மோடு, நம்மில் ஒருவராக, நமக்காக நம்முடன் பயணிப்பவராக கடவுள் இம்மண்ணிலே அவரை மழலையாக மறு உருவெடுக்கச் செய்தார்.
அதிகாரம் செலுத்துபவராக அல்ல நம்மை அரவணைத்து, அன்பு செய்பவராக பிறக்கச் செய் தார் தந்தையாம் இறைவன். இவரது இனிய இந்த பிறப்பை எண்ணியே என்னைத் தேடிவந்த எங்கும் நிறைந்த இறைவன் நீ, நங்கை உதிரம் ஒருங்கினாய் என்றும், ஞாலம் தாங்கும் நாதன் நீ, சீலக்கரத்தில் அடங்கினாய் என்றும், கன்னி ஈன்ற செல்வமே என்ற கிறிஸ்து பிறப்புப் பாடலில் பாடுகிறோம்.
இந்த கிறிஸ்துவின் நமக்கான மானுடப் பிறப்பு மனிதரைப் புனிதராக மாற்றிடவே. புனிதராம் கடவுள் மனிதராகி நான் உன்னோடு என்று தன்னை நம்மோடு அடையாளப்படுத்தினார் என்ற உண்மையை சுட்டிக் காட்டுகிறது.
இத்தகைய விண்ணின் விடியல் மண்ணின் மழலையானதை தரிசிக்கும் பேறு பெற்றவர்?