பரமக்குடி: மார்கழி மாதம் முழுவதும் பெருமாள் கோயிலில் ஆண்டாள் அருளிய திருப்பாவையும், சிவன் கோயிலில் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையும் பாடுவது வழக்கம். பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று காலை 5:00 மணிக்கு திருப்பாவை குழுவினர் திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை பாடினர். பின் 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின், பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் மார்கழி மாத பிறப்பையொட்டி கோபூஜை நடத்தப்பட்டது.
*பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் திருவெம்பாவை பாடப்பட்ட தீபாராதனை நடந்தது. மேலும் பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர், தரைப்பாலம் சுப்பிரமணியசுவாமி, கன்னி சுந்தர்ராஜன் தெரு யோகமுனீஸ்வரர் கோயில், நயினார்கோவில் நாகநாதசுவாமி உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் உற்ஸவம் நடந்தது. பாகவதர்கள் பஜனை பாடல்கள் இசைத்தபடி தெருக்களில் வலம் வந்தனர். நாளை டிச.19ல் சிவபெருமான் படி அருளிய லீலை நடக்கிறது.