பதிவு செய்த நாள்
19
டிச
2019
12:12
கோவை ஆவாரம்பாளையத்திலுள்ள, ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால பெருமாள் கோவிலில், நாளை காலை 5:00 மணிக்கு, ஆண்டாள் அருளிய திருப்பாவையின் நான்காம் பாடலான,ஆழிமழைக்கண்ணா... ஒன்றும் நீ கைகர வேல்... என்று துவங்கும் பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.
கோவிலின் சிறப்புஇக்கோவிலில் பருவ வயது பெண்களும், ஆண்களும் திருமணத்தடை நிவர்த்தியடைய வேண்டி, வேணுகோபால சுவாமியிடம் சங்கல்பம் செய்து, தொடர் வழிபாடு செய்தால் திருமணத்தடை நீங்கும்.புத்திர பாக்கியம் கிடைக்க,ரோகிணி நட்சத்திரத்தில், அதிகாலை நேரத்தில், 12 விளக்கேற்றி பால்பாயாசம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.மார்கழி மாதத்தையொட்டி இக்கோவிலில், நாளை காலை 5:00 மணிக்கு, திருப்பாவையின் ஆழிமழைக்கண்ணா ஒன்றும் நீ கைகர வேல்... என்று துவங்கும் பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.
இப்பாடலின் பொருள்கடல் போன்ற கம்பீரமுடைய மழைத்தேவனே, நீ எதையும் கையில் மறைத்து வைத்துக்கொள்ளாதே. நீ கடலில் புகுந்து, நீரை மொண்டு, பெரும் ஆரவாரத்தோடு, ஆகாயத்தில் எழுந்து வா. காலமும், கரணமும் எம்பெருமானது திருமேனி போல்,கறுத்து வலிமை வாய்ந்த தோள்களை உடைய திருமாலின், சுதர்சன சக்கரம் போல் மின்னி, அவன் வலம்புரி சங்கில் எழும் ஒலி போல் இடிஇடித்து, பெருமான் வில்லிலிருந்து பாய்ந்து வரும் அம்பு போல், மழையாக பெய்து பூமியை குளிரச்செய்ய வேண்டும்.