விளிம்பை நோக்கி பயணிக்க வேண்டுமெனில் கிறிஸ்து பிறப்பின் அடையாளங்களான, அவர் பிறந்த இடம், சுட்டிக் காட்டும் பொருளை உணர்ந்õல் மட்டுமே சாத்தியமாகும். இரண்டு அடையாளங்கள் உணர்த்தும் உன்னதமான பொருளை சற்று சிந்திப்போம்.
1. “விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை ” விடுதி என்பது வழிப்போக்கர்கள் வந்து போகும் இடம். யாரும் நிரந்தரமாக விடுதியில் தங்க முடியாது. இயேசு எனும் மீட்பர் உலகிற்கு விருந்தாளியாக வரவில்லை. மாறாக நம்மில் ஒருவராக நம்மோடு நிரந்தரமாக தங்கவே வந்தார் என்ற ஆழமான உண்மையை வெளிப்படுத்தவே மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். இதை இறைவாக்கினர் எரேமியா “இஸ்ரயேலின் நம்பிக்கையே துன்ப வேளையில் அதனை மீட்பவரே நாட்டில் நீர் ஏன் அன்னியரைப் போல் இருக்க வேண்டும்? இரவு மட்டும் தங்க வரும் வழிப்போக்கர் போல் நீர் ஏன் இருக்க வேண்டும்?” (ஏரே: 14:8) என முன்னுரைக்கிறார்.
2. தீவனத் தொட்டி என்பது கால் நடைக்கான தீனிக்கான தொட்டி, அதில் இயேசு பிறந்திருக் கிறார் என்றால் அதன் பொருள் அவர் உலகிற்கு உணவாக வந்தார். மக்கள் வாழ்வு பெற தன்னையே ஆன்மிக உணவாக அளிக்கிறார் என்பதன் அடையாளமே. கால்நடைகள் தீவனத் தொட்டியை தேடி வந்து நிறைவு பெறுவது போல நாமும் இயேசு எனும் உணவைத் தேடி சென்று நிறைவு பெற வேண்டும் என்ற ஆழமான உண்மையைச் சுட்டிக் காட்டுகிறது இயேசுவின் விளிம்பு நோக்கிய பிறப்பு.
மேற்கண்ட இரு அடையாளங்களும் இயேசுவின் விளிம்பை நோக்கிய பிறப்பு வாழ்வு தர அதுவும் நிறைவாக அந்த வாழ்வை மானுட சமுதாயத்திற்கு தர வேண்டும் என்பதை தெளிவு படுத்துகிறது. இந்த உன்னத பிறப்பு யாருக்கு அமைதியைக் கொண்டு வந்தது?