டிச.26ல் சூரியகிரகணம்: பழநி கோயிலில் பூஜை நேரம் மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2019 11:12
பழநி : பழநி மலைக்கோயிலில் டிச. 26 அன்று சூரியகிரகணத்தை யொட்டி பூஜைகள் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அன்று காலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4:10 மணிக்கு தனுர் மாத பூஜையும், 4:55 மணிக்கு விளாபூஜையும், 5:55 மணிக்கு காலசந்தி பூஜையும் நடக்கிறது. பின்னர் 6:15 மணிக்கு கோயில் நடை சாற்றப்படும். பகல் 11:15 க்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு சம்ரோட்சன பூஜையும், உச்சிக்கால பூஜையும் நடக்கும். இது உபகோயில்களிலும் பின்பற்றப்படும் என்றார்.