பதிவு செய்த நாள்
20
டிச
2019
11:12
தேனி :தேனி மாவட்டத்தில் இருந்து சபரிமலை செல்லும் பாதை இன்று முதல் ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது. சபரிமலை பக்தர் வாகனங்களால் குமுளியில் நெரிசல் ஏற்படும். மண்டல பூஜை, மகர ஜோதி நேரத்தில் இது இன்னும் அதிகமாகும். நெருக்கடியை குறைக்கும் பொருட்டு குமுளி மலைரோடு இன்று (டிச. 20ம் ) காலை 10:00 மணி முதல் ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.
தேனியில் இருந்து செல்லும் வாகனங்கள் கம்பம், கம்பம் மெட்டு, ஆமையார், புளியமலை, கட்டப்பனை, குட்டிக்கானம், முண்டக்காயம், எரிமேலி வழியாக பம்பை செல்லலாம். சபரிமலையில் இருந்து திரும்பும் வாகனங்கள் பம்பை, குட்டிக்கானம், பீர்மேடு, பாம்பனாறு, வண்டிப்பெரியாறு, குமுளி, கம்பம் வழியாக தேனிக்கு வரவேண்டும். முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.