பதிவு செய்த நாள்
20
டிச
2019
01:12
சென்னை: மீனம்பாக்கத்தில், சத்குரு நடத்திய, ஈஷா யோகா வகுப்பில், பாதுகாப்பு படை வீரர் கள், காவல் துறையினர், மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஈஷா யோகா மையம் சார்பில், உலகம் முழுவதும் ஈஷா யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மீனம்பாக்கம், ஜெயின் கல்லுாரியில், ஈஷா யோகா வகுப்புகள், தமிழ், ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன.
சென்னையில், ஆறு ஆண்டுகளுக்கு பின், சத்குரு வகுப்பை நேரடியாக நடத்துகிறார். தமிழ் யோகா வகுப்பின் நிறைவு நாளான நேற்று 19ம் தேதி , பாதுகாப்பு படை வீரர்கள், காவல் துறை யினர், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் முதல், ஐ.டி., நிறுவன பணியாளர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு, ’ஷாம்பவி மஹாமுத்ரா’ எனும் தியான பயிற்சிக்கு தீட்சை வழங்கினார். நாளை, நாளை மறுநாள் (டிசம்., 21, 22ல்) ஆங்கில பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில், பல மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.