உளுந்துார்பேட்டை: பு.கொணலவாடி கிராமத்தில் உள்ள பெரியாயி கோவிலில் சாரதா ஆஸ்ரமம் சார்பில் உலக நலன் வேண்டி குத்துவிளக்கு பூஜை நடந்தது.விளக்கு பூஜையை சாரதா ஆசிரம சகோதரி யத்தீஸ்வரி அபத்திய ப்ராணா மாஜி தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.பூஜையில் சாரதாம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.