ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்டில் மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால் ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடப்பது ரத்து செய்யப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதை அடுத்து நேற்று இந்த மசூதியில் மீண்டும் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்தது. இதில் 1000 பேர் பங்கேற்றனர்.