பதிவு செய்த நாள்
25
டிச
2019
10:12
மதுரை : மதுரையில் நாளை (டிச.,26) நடக்கும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோயில்களின் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் இணை கமிஷனர் நடராஜன்: மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று (டிச.,25) இரவு ராக்காலத்தில் திருவனந்தல், விளா பூஜை, காலசந்தி பூஜை முடிந்து நடை சாத்தப்படும். நாளை (டிச.,26) பகல் 12:00 மணிக்கு நடை திறந்து திருக்காலசந்தி, உச்சிகால பூஜைகள் முடிந்து நடை சாத்தப்படும். மாலை 4:00 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இதே நேரத்தில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் தவிர்த்து பிற உப கோயில்களில் நடை சாத்தப்பட்டும், திறக்கப்பட்டும் பூஜைகள் நடக்கும், என்றார்.
அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உதவி கமிஷனர் அனிதா: இன்று (டிச.,25) கோயில் நடை வழக்கம் போல் திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும். இரவு 7:30 மணிக்கு நடை சாத்தப்படும். நாளை (டிச.,26) பகல் 12:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும், என்றார். உதவி கமிஷனர் ராமசாமி, கூடலழகர் கோயில்: நாளை (டிச.,26) பகல் 12:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடக்கும். அலங்கார திருமஞ்சனம் முடித்து பகல் 3:00 மணிக்கு நடை சாத்தப்படும். பின் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும். திருப்பல்லாண்டு கருட சேவை புறப்பாடு இரவு 7:00 மணிக்கு நடக்கிறது, என்றார்.