இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி என்னும் தொழில் அதிபர் உறவினர்களுக்கு கடிதம் எழுத இயலாததால் அட்டையில் படத்தை அச்சிட்டு ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை அனுப்பினார். அதன் பிறகு மக்கள் மத்தியில் வாழ்த்து அனுப்பும் பழக்கம் ஏற்பட்டது. ஹென்றி அனுப்பிய ஆயிரம் அட்டைகள் இப்போதும் லண்டனில் பாதுகாக்கப்படுகிறது.