இந்தியாவில் அந்நியர்களின் ஆட்சி செய்த காலத்தில் கோயில்களை அடித்து நொறுக்கினர். தங்களின் மதத்துக்கு மாறும்படி மக்களைக் கட்டாயப்படுத்தினர். அப்போது துளசிதாசரின் "ராமசரித மானஸ் என்னும் இந்தி ராமாயணம் தக்க துணையாக இருந்தது. இதிலுள்ள "அனுமன் சாலீஸா மக்களுக்கு வீரத்தை ஊட்டியது. பாதுகாப்பு கவசமாக விளங்கியது. "சாலீஸா என்றால் "புகழ். அனுமனின் புகழ் பரப்பும் பாடலான இதில் 40 ஈரடி ஸ்லோகங்கள் உள்ளன. இதைப் படித்தால் கோழைக்கும் உற்சாகம் வந்து விடும். தைரியமான இந்தியாவை, ஊழல் மலிந்துள்ள இந்த நாட்டைக் காக்க அனுமன் சாலீஸாவைக் கட்டாயம் படிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், அனுமன் மீண்டும் பிறந்து, இங்கிருக்கும் ராவணர்களை வதம் செய்து நாட்டைக் காப்பார்.