ராமாயணத்தில் ரத்தினங்கள் இரண்டு. ஒன்று பக்தர்களின் ரத்தினமான அனுமன். மற்றொன்று மந்திரங்களின் ரத்தினமான சுந்தர காண்டம்.
ராம பக்தர்களில் தலைசிறந்தவர் அனுமன். "ராமா என்னும் திருநாமத்தை சொன்னால் அனுமனின் அருள் கிடைக்கும். வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் உடனடி தீர்வு தருவது சுந்தரகாண்டப் பாராயணம். பிரிவால் வாடிய சீதையின் துன்பம் தீர்க்க ராமநாமத்தின் மீதுள்ள நம்பிக்கையால் கடலையும் தாண்டியவர் அனுமன். இந்த இரு ரத்தினங்களின் மதிப்பை அறிந்தவர்கள் அதை நழுவ விட மாட்டார்கள். தினமும் அனுமனை வழிபட்டு சுந்தரகாண்டத்தில் ஒரு சர்க்கத்தை படிப்பவருக்கு வாழ்வில் சிரமம் ஏற்படாது. சிக்கலான பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும்.