திருப்பதியிலுள்ள மலையில் தவமிருந்த அஞ்சனாதேவி, அனுமனுக்கு தாயாகும் பாக்கியத்தை அடைந்தாள். ஆஞ்சநேயர் என்றால் "அஞ்சனையின் மகன் என்பது பொருள்.
குழந்தைப் பருவத்தில் சாகசம் செய்வதில் வல்லவரான இவர் வான மண்டலத்தை நோக்கிப் பறந்தார். சூரியனைப் பழம் என கருதி சாப்பிட முயன்றார். இயற்கைக்கு மாறான இச்செயலை கண்டிக்கும் ேநாக்கில் தேவலோகத்தின் தலைவனான இந்திரனால் தண்டிக்கப்பட்டார். மகனின் குறும்புத் தனத்திற்கு முடிவு கட்ட எண்ணிய அஞ்சனை, வானவெளியை மாயக்கயிறாக்கி, அவரது கைகளைக் கட்டினாள். ஏழுமலையான் முன் நிறுத்தினாள். இதன் பிறகு, அம்மாவின் பேச்சிற்கு கட்டுப்பட்டு அமைதியானார். திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி கோயில் எதிரே உள்ள கோயிலில் இருக்கும் "பேடி ஆஞ்சநேயர் இவரே. "பேடி என்றால் "விலங்கிடப்பட்ட என்பது பொருள்.