பதிவு செய்த நாள்
26
டிச
2019
01:12
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்திவிழா நேற்று 25ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அனுமனுக்குசிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடந்தது.அனுமன் மார்கழி மூல நட்சத்திரத் தில் பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும்மார்கழி மாதத்தில் வரும் மூல நட்சத்திர தினத்தில் அனு மன் ஜெயந்திவிழா கொண்டாடப்படுகிறது. நேற்று 25ல் சேதுக்கரை சேது பந்தன ஆஞ்சநேயர் கோயிலில் காலை 7:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியுடன் துவங்கியது.
அனுமனுக்கு புண்ணிய சங்கல்பம் செய்யப்பட்டது. பின் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அனுமனுக்கு வடை மாலை சாற்றி வழிபட்டனர். சேதுக்கரையில் ஏராளமான வட மாநில பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் கிரிவாசன் செய்திருந்தார்.
ராமநாதபுரம் அரண்மனை பால ஆஞ்சநேயர் கோயில், கேதாண்டராமர் கோயிலில் அனுமனு க்கு சிறப்பு அபிேஷகம் அலங்காரம், நடந்தது. தீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் பங் கேற்றனர்.அனுமன் சன்னிதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
*பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயில், பஞ்சமுக ஆஞ்சநேயர்,வீரஆஞ்சநேயர், பாலஅனுமான் மற்றும் அனைத்து பெருமாள் கோயில்களிலும்சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டன.
அனுமார் கோதண்டராமசாமிகோயிலில் புனிதப்புளி ஆஞ்சநேயருக்கு நேற்று முன்தினம் 24ம் தேதி இரவு தொடங்கி, நேற்று 25ம் தேதி பகல் முழுவதும் பக்தர்கள் 11, 108, 1008 முறை என கோயில் பிரகாரத்தை சுற்றி வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து நேற்று 25ம் தேதி காலை பால், பழம், பன்னீர், சந்தனம், இளநீர் என அபிஷேகம்நடத்தப்பட்டு, இரவு அனுமன் வீதிவலம் வந்தார்.
*பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் அமாவாசையன்று காலை 6:00 மணிக்கு அனுக்ஞை, பூர்ணாகுதி நிறைவடைந்து உற்சவருக்கு 13 வகையான அபிஷேகம்,108 கலச அபிஷேகம் நடந்தது. 1008 சகஸ்ர நாம அர்ச்சனை நடந்தன. மூலவர்பஞ்சமுக ஆஞ்சநேயர் பல்வேறு பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.
*பரமக்குடி சுந்தர்நகர் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயிலில், காலை 10:00 மணிக்குபெருமாள் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து நகர்வலம் வந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.
*பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் அனுமன் தனி சந்நதியில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை அனுமன் வாகனத்தில் சுந்தரராஜப் பெருமாள் ராமாவதாரத்தில் வீதிவலம் வந்தார்.
*எமனேஸ்வரம் அனுமன் கோயிலில் ராமர், லெட்சுமணன், சீதை மற்றும்அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள்தரிசனம் செய்தனர்.
*ராமேஸ்வரம் வர்த்தகன் தெருவில் பால அனுமான் கோயில், பஸ் ஸ்டாண்ட் அருகில் தாசபக்த அனுமான் கோயில், பத்திரகாளியம்மன் கோயில் அருகில் உள்ள வால்அறுந்த அனுமான் கோயிலில் வடை மாலை அலங்காரம் செய்து சிறப்பு பூஜை, மகா தீபாரதனை நடந்தது. இதில் தாசபக்த அனுமான் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
*கடலாடியில் உள்ள வரத ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட 21 வகை அபிஷேக, ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பகலில் அன்ன தானமும், மாலையில் உலக நன்மைக்கான விளக்குபூஜை நடந்தது. வெற்றிலை, வெண்ணெய், 1008 வட மாலைகள் மூலவர் வரத ஆஞ்சனேயருக்கு சாற்றப்பட்டது. ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின் முறையினர், கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.