பதிவு செய்த நாள்
26
டிச
2019
02:12
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து கொயில்களிலும் நேற்று 25ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதை யொட்டி விருதுநகர் ராமர் கோயில், காளியம்மன் கோயில், வாலசுப்பிரமணியசுவாமி கோயில், என்.ஜி.ஓ.,காலனி வழிவிடு விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள அனுமன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சிறப்பு அபிஷேகத்துடன், சிறப்பு பூஜையும் நடந்தது. திரளான பக்தர்கள் வெற்றிலை, வடை, பழங்கள் உள்ளிட்ட மாலைகளை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பிள்ளையார்குளம் அக்ரஹாரம் ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமன் ஜெயந்தி நடந்தது. சிறப்பு அபிசேகங்களுடன் சந்தனகாப்பு அலங் காரத்தில் காட்சியளித்தார். திரளான பக்தர்கள்தரிசித்தனர். ஏற்பாடுகளை டிரஸ்டி கிருஷ்ணன் செய்திருந்தார்.
* திருவேங்கடமுடையான் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரத்தை ஹயக்ரீவாஸ் செய்தார். சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள் பங்கேற்றனர்.
* திருமுக்குளம்: ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஆஞ்சநேய ரை திரளான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசித்தனர். பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
* ராஜபாளையம்: ராஜபாளையம் ஆதி விடும் விநாயகர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகத்துடன் தயிர், தேன், பன்னீர், முப்பழம், மஞ்சள், திரவியம், கரும்புச்சாறு அபிஷே கம் நடந்தது. சந்தனக்காப்பு பூசப்பட்டு பக்தர்கள் நாம பஜனை பாட ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். அன்னதானமும் நடந்தது.
* புதுப்பாளையம் கோதண்டராமர் கோயிலில் காலை முதல் 10 வகை அபிஷேகம், பஜனை யுடன் பூஜை நடந்தது. வெண்ணை காப்பு செய்து ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார்.
* வேட்டை வெங்கடேஷ பெருமாள் கோயில் உள்ள அனுமன் அபிஷேகத்துடன் விஷேச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. .திரளான பக்தர்கள் ராம நாமத்துடன் பஜனை பாடி வழி பட்டனர்.
* தேவதானம் கல்லணை ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆரஞ்சு பழங்களால் பந்தல் அமைக்கப் பட்டது. மலர்களாலும், ரூபாய் நோட்டுக்களாலும் அலங்கரிக்கப்பட்டு விஷேச பூஜைகள் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.