பதிவு செய்த நாள்
27
டிச
2019
11:12
பெரியநாயக்கன்பாளையம், கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், நாளை, 12ம் நாள் வழிபாடாக, கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி... என்ற பாடலை பக்தர்கள் பாடுகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜப் பெருமாள் கோவில் பழம்பெருமை மிக்கது. இங்கு ஆண்டுதோறும், புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு விழாக்கள் நடத்தப்படும். மார்கழி மாதம், 30 நாட்களும் அதிகாலை திருப்பாவை பாடும் பக்தர்களை தொடர்ந்து, பாகவத கோஷ்டியினரின் சிறப்பு பஜனை நடந்து வருகிறது.அதிகாலை பஜனை கோஷ்டியினர் வீதிதோறும் வலம் வருவது கண்கொள்ளக்காட்சியாகும். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் பிரமோற்சவ விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் சிறப்பாக கொண்டாடப்படும். இக்கோவிலில் நாளை திருப்பாவையின், 12ம் பாடலான, கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி... என துவங்கும், பாடலை பக்தர்கள் பாடுகின்றனர்.
இப்பாடலின் பொருள், கன்றுகளின் நினைவால் பாலை சொரிந்து, அதனால் வீட்டை நனைத்துச் சேறாக்குகின்ற எருமைகள் நிறைந்த நற்செல்வத்தை உடையவனின் தங்கையே! எங்கள் மீது பனி விழ, உங்கள் வீட்டு வாசலில் நின்று, தென்னிலங்கை வேந்தனாகிய ராவணனை அழித்த ஸ்ரீராமனை நாங்கள் பாடியும், நீ பேசாமல் இருக்கிறாயே! பிற வீட்டினர் எல்லாம் எழுந்து விட்டார்கள். நீ இனியாவது எழுந்திரு... அப்படி என்ன பெரிய துாக்கம் உனக்கு? என்பதாகும்.