ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பகல்பத்து உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2019 10:12
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் பகல்பத்து உற்ஸவம் பெரியாழ்வார் திருமாளிகையில் ஆண்டாள் ரெங்கமன்னார் பச்சைபரத்தலை பார்வையிடும் வைபவத்துடன் துவங்கியது.
நேற்று மாலை 4:45 மணிக்கு ஆண்டாள் ரெங்கமன்னார் ஆடிப்பூர பந்தலில் எழுந்தருளினர். அங்கு வேதபிரான் அனந்தராமபட்டர் மற்றும் சுதர்சனன் மரியாதை செய்து பெரியாழ்வார் திருமாளிகைக்கு அழைத்து வந்தனர். அங்கு காய்கறிகள் பச்சை பரத்தலை பார்வையிட்ட ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ராஜகோபுரம் வழியாக வடபத்ரசயனர் சன்னதி கோபால விலாச பகல்பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் அரையர் சேவை பெரியபெருமாள் ஸ்ரீதேவி பூமாதேவி ஆழ்வார்கள் ஆச்சார்யர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து பச்சைபரத்தல் காய்கறிகளை பெற்று சென்றனர்.தக்கார் ரவிசந்திரன் செயல் அலுவலர் இளங்கோவன் கோயில் பட்டர்கள் பங்கேற்றனர். பகல்பத்து உற்ஸவம் துவங்கியதை முன்னிட்டு 2020 ஜன. 16 வரை தினமும் காலை 10:00 மணிக்கு ஆண்டாள் ரெங்கமன்னார் புறப்பாடும் கோபாலவிலாசத்தில் பகல் 1:00 மணிக்கு அரையர்சேவை திருவாராதனம் கோஷ்டி பெரியபெருமாள் பத்தி உலாவுதல் முடிந்து இரவு 7:30 மணிக்கு ஆண்டாள் ரெங்கமன்னார் மூலஸ்தானம் வந்தடைதல் நடக்கிறது.