பதிவு செய்த நாள்
28
டிச
2019
10:12
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு மார்கழி மாத, 13ம் நாள் சிறப்பு பூஜை நடக்கிறது.பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையத்தில் மிக பழமையான சுயம்பு கரிவரதராஜப் பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவி சமேதரராய் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இக்கோவிலுக்கு ராமானுஜர் வருகை தந்துள்ளார்.கோவிலின் சிறப்புஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விக்டோரியா மகாராணி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோர், இக்கோவிலின் பரம்பரை அர்ச்சகர்களாக, ஸ்ரீநித்திய வைஷ்ணவ அய்யங்கார் குடும்பத்தை நியமனம் செய்தது தொடர்பான ஆவணங்கள், இன்றும் இக்கோவிலில் பூஜை செய்து வரும் வைஷ்ணவ குடும்பத்தார் வசம் உள்ளது.இக்கோவிலில் நாளை காலை, 5:00 மணிக்கு நடக்கும் மார்கழி மாத, 13ம் நாள் பூஜையில் திருப்பாவை, 13ம் பாடலான, புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளி... என துவங்கும் பாடலை பாடுகின்றனர்.பாடலின் பொருள்பறவையின் வடிவில் வந்த பகாசுரனின் வாயைப் பிளந்தவனும், ராவணனின் தலைகளைக் கிள்ளி எறிந்தவனுமாகிய பகவானின் பெருமைகளைப் பாடிக் கொண்டு, மற்றப்பெண்கள் அனைவரும் போய் சேர்ந்து விட்டார்கள்.வெள்ளி தோன்றி, வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் எல்லாம் குரல் எழுப்ப துவங்கி விட்டன. தாமரை பூவையும், மானையும் போன்ற கண்ணழகு உடையவளே, பதுமை போன்ற அழகியே, இந்த நல்ல நாளில், கண்ணனைத் தனியே நினைக்கின்ற கள்ளத்தனத்தை விட்டு, எங்களோடு கலந்து, உடம்பு குளிர நீராடாமல், இன்னும் படுக்கையில் கிடப்பதா?