Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை சுற்றுலா பொருட்காட்சியில் ... விருதுநகரில் லட்சார்ச்சனை விருதுநகரில் லட்சார்ச்சனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போடி ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
போடி ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகம்

பதிவு செய்த நாள்

28 டிச
2019
12:12

போடி:- போடி ஐயப்பன் கோயிலில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு  அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

இக்கோயிலில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள், போடி  திருவாசக குழு வினர் பஜனையுடன் இரட்டை வாய்க்கால் விநாயகர் கோயிலில்  இருந்து தீர்த்த குடம் எடுத்து நகர் வலம் வந்தனர்.

ஐயப்பனுக்கு சோடாபிஷேகம், தீபாராதனை பக்தசபை தலைவர் முனியாண்டி  தலைமையில் நடந்தது. சபை குருநாதர் மகாலிங்கம், செயலாளர்  விவேகானந்தன், பொருளாளர் ஆறுமுகம், அகில பாரத அய்யப்ப சேவா சங்க  பொருளாளர் முருகன், துணை செயலாளர் மாரிமுத்து, இணை செயலாளர்  முருகேசன், கவுரவ ஆலோசகர் சோமஸ்கந்த குருக்கள் முன்னிலை வகித்தனர்.
ஏராளமான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர். சிறப்பு அலங்காரத்தில்  ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுவாமி அலங்காரத்தை அர்ச்சகர்  கமலகண்ணன் செய்திருந்தார்.

தேவதானப்பட்டி: ஜெயமங்கலம் ஐயப்ப சேவா சங்கம் சார்பில், ஐயப்பன்  கோயிலில்  விளக்கு பூஜை நடந்தது.   சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை  நடந்தது ஏராளமான பக்தர்கள்  தரிசனம் செய்தனர். அன்னதானமும்  வழங்கப்பட்டது.

சக்தி, யாழி பூஜை தேவாரம்:,தேவாரம் ஐயப்பன் கோயில் 63வது சக்தி, யாழி  பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தேவாரம் ஜமின்தார் சிவராஜ பாண்டியன் தலைமை வகித்தார். ஜமின்தார் சிவதணிராஜா முன்னிலை வகித்தார். நேற்று முன்தினம் 26ம் தேதி மாலை 7:00  மணிக்கு மணி மண்டபத் திலிந்து ஐயப்பன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.  அரங்கநாதர் கோயில் எதிரே அமைக்கப் ட்டுள்ள ஆசிரமத்தில் எழுந்தருளினார். நேற்று 27ம் தேதி மாலை 4:30 மணிக்கு கரகம், 7 கன்னிமார் நெய் கொப்பரை சுமந்து வர  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு 9:30 மணிக்கு சுவாமி நகர்வலம் நடந்தது.

ஏற்பாடுகளை மணி மண்டப நிர்வாகிகள்  நாராயணன், மணிகண்டன் மற்றும்  ஐயப்ப பக்தர் கள் செய்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று 28ம் தேதி அதிகாலை 5:00 மணி முதல் யாழியில் பூக்குழி இறங்குதல் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar