பதிவு செய்த நாள்
30
டிச
2019
12:12
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அமைதிநகரில், 32ம் ஆண்டு அன்னதான விழா நடந்தது.பொள்ளாச்சி ஜோதிநகர் அருகே அமைதி நகரில், ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப பக்தர்கள் சார்பில், 32ம் ஆண்டு அன்னதான விழா மற்றும் மண்டல பூஜை நேற்றுமுன்தினம் 28ம் தேதி நடந்தது.
விழாவையொட்டி காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் மண்டல பூஜை துவங்கியது. தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. பின்னர் மாலையில், வாழை மட்டை யில் கோபுரம் மற்றும் 18 படிக்கட்டுகள் அமைத்து, விநாயகர், ஐயப்பன் மற்றும் முருகன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு, 7:00 மணி முதல், 9:00 மணி வரை, பக்தி பாடல்கள் பஜனை நிகழ்ச்சியும், இரவு, 10:00 மணிக்கு படிப்பாடலுடன் ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.