பதிவு செய்த நாள்
30
டிச
2019
12:12
மடத்துக்குளம்:கொமரலிங்கம் கரிவரதராஜ பெருமாள் கோவிலை புதுப்பிக்க, இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மடத்துக்குளம் கொமரலிங்கம் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. பல ஆண்க ளுக்கு முன்பு, பூட்டப்பட்டு, பராமரிப்பு இன்றி பாழடைந்த இந்தக்கோவிலை திறக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, 2014, மார்ச் 27ம் தேதி, பொதுமக்கள் முன்னிலையில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளால், திறக்கப்பட்டது. முப்பது ஆண்டுகளுக்குப்பின், திறக்கப்பட்ட இந்த கோவிலை ஆய்வு செய்த, அதிகாரிகள் விரைவில் புதுப்பிக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால், ஐந்து ஆண்டுகளை கடந்தும் பராமரிப்பு பணிகள் ஏதும் நடக்கவில்லை.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ’பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பு, சோழர்களால் கட்டப்பட்ட இந்த வைணவ கோவில் பல சிறப்பம்சங்களை கொண்டது. உட்புறம் அகழிக்கு மத்தியில் கோவில் உள்ளது. மேற்கூரையிலுள்ள துளைகள் வழியாக அகழியில் சூரிய ஒளி விழுகிறது.வரலாற்று தகவல் கூறும் கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தக்கோவில் தற்போது, பாழடைந்து உள்ளது. கோவிலை புதுப்பிக்க இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.