Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவலிங்க வழிபாட்டை வீட்டிலேயே ... கணநேரமும் பிரியாத சக்கரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காஞ்சிப் பெரியவர் ஆராதித்த கனகதுர்கா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2012
05:04

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை செல்லும் குறுக்கு வட்டச்சாலையில் 4கி.மீ., தூரத்திலுள்ள ஏனாத்தூரில் கனகதுர்கா கோயில் உள்ளது. 45 ஆண்டுகளுக்கு முன் விவசாயி ஒருவர் பூமியைத் தோண்டும்போது, ஒரு அம்மன் சிலையைக் கண்டெடுத்தார். அதை அங்கிருந்த வன்னிமரத்தின் அடியில் வைத்து ஊர்மக்கள் வழிபட்டு வந்தனர். காஞ்சிப்பெரியவரின் ஆலோசனைப்படி அந்த அம்பாளுக்கு கனகதுர்கா என்னும் திருநாமம் சூடப்பட்டு கோயில் எழுப்பப்பட்டது. இந்த அம்பிகை தனது கைகளில் அம்பு, ஈட்டி, வாள், கதாயுதம், சூலம் போன்ற ஆயுதங்களைத் தாங்கி, சத்ரு சம்ஹார கோலத்தில், உலகைக் காப்பவளாக எழுந்தருளி இருக்கிறாள். அவளது 12 கைகளில் இருகைகள் மட்டும் பின்புறம் இருப்பது மாறுபட்ட அமைப்பு. வேண்டுதல் நிறைவேறப் பெற்றவர்கள் வன்னிமரத்தடியில் பொங்கலிடுவர். கை,கால்வலி, வாதநோய் உள்ளவர்கள், பாதயாத்திரை வருவதாக நேர்ந்து கொண்டால் சுகமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மாட்டுப்பொங்கல் அன்று காஞ்சிப்பெரியவர் இங்கு வந்து அம்மனை வழிபடுவது வழக்கம். ஞாயிறு ராகுகாலம், பவுர்ணமி, ஆடி,தைவெள்ளி, தைப்பூசம் நாட்களில் சிறப்பு பூஜை நடக்கும். பெரியவர் பெயரில் அமைந்த சந்திரசேகரேந்திரா பல்கலைக்கழகம் கோயில்அருகில் உள்ளது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar