பதிவு செய்த நாள்
01
ஜன
2020
12:01
சென்னை : புத்தாண்டை முன்னிட்டு, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி கூறியதாவது: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும், பிரமாண்ட அலங்காரமும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, வெளிநாடுகளில் இருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், 1,500 கிலோ மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.இந்த அலங்காரம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மட்டுமே செய்யப்படும். தற்போது தி.நகர் வெங்கடேச பெருமாள் கோவிலிலும், முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்படும். இரவு பக்தர்கள் வருகை பொறுத்து, நடை திறந்திருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.