கோவை: ராம்நகர் கோதண்டராமர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தையொட்டி, கோவில் புனருத்தாரண பணிகள் துவங்கியுள்ளன.
ராம்நகர் கோதண்டராமர் கோவிலில், வரும் மே 4ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முன்னதாக, கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனருத்தாரண பணிகளுக்கான கால்கோள் விழா, கோவில் வளாகத்தில் கடந்த ஞாயிறன்று மங்கள பூஜைகளுடன் நடந்தது. கோதண்டராமர் கோவில் தலைவர் நாகசுப்ரமணியம், செயலாளர் மோகன்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நேற்று, கோவில் ராஜகோபுரத்துக்கு வர்ணம் பூசும் பணிக்கான, சாரம் கட்டும் பணி துவங்கியது. இதற்காக பூம்புகாரிலிருந்து வந்துள்ள, 15 கோபுர பஞ்சவர்ண கலைஞர்கள், இப்பணியை மேற்கொள்கின்றனர்.