பதிவு செய்த நாள்
01
ஜன
2020
02:01
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், 2019ம் ஆண்டு முடிந்து, 2020ம் ஆண்டு பிறப்பதையடுத்து, புத்தாண்டு விழா கொண்டாடப்படுகிறது. புத்தாண்டையொட்டி மக்கள் நேற்றுமுன்தினம் 30ல், மாலையில் இருந்தே தயராகி விட்டனர்.
மேலும், சுற்றுலாப்பயணிகள் பலரும் புத்தாண்டை கொண்டாட மலைவாசஸ்தலமான வால்பாறை, டாப்சிலிப் பகுதிகளுக்கு குடும்பத்துடன் கொண்டாட சென்றனர்.
தனியார் விடுதி என பல இடங்களில், மியூசிக் ஷோ, அன்லிமிடெட் உணவு என, பல்வேறு விதமான நிகழ்ச்சிகளும் அரங்கேறின. பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள புனித லுார்து அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது.இதுபோன்று, பொள்ளாச்சி கடை வீதி விநாயகர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நிகழ்ச்சி நடக்கிறது.