பதிவு செய்த நாள்
01
ஜன
2020
02:01
ஈரோடு: குப்பியண்ணசுவாமி கோவில் உண்டியலில், 1.65 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத் தது. ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள, துக்காச்சி 60 வேலம்பாளை யம் குப்பியண்ணசுவாமி, செல்வ குமாரசுவாமி கோவிலில், பொங்கல் விழா கடந்த, 20ல் தொட ங்கி, 30ல் மறு பூஜையுடன் நிறைவடைந்தது.
விழாவையொட்டி வைக்கப்பட்ட உண்டியல் காணிக்கை, எண்ணும் பணி நேற்று டிசம்., 31ல், நடந்தது. மொத்தம் ஐந்து உண்டியல்களில், ஒரு லட்சத்து, 69 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. கட்டண சீட்டு மூலம், 35 ஆயிரம் ரூபாய், விழா கடைகள் ஏலத்தில், 43 ஆயிரம் ரூபாய் என, இரண்டு லட்சத்து, 69 ஆயிரம் ரூபாய் கிடைத்ததாக, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தினேஷ்குமார் தெரிவித்தார்.