காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் 2020ம் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு அனைத்து கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் 2020ம் ஆண்டு புது வருட பிறப்பை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருநள்ளாரில் உள்ள சனிஸ்வர பகவான் கோவில், அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவில், கோவில்பத்து கோதண்டராமர், நித்ய கல்யாணப் பெருமாள், கைலாசநாதர் மற்றும் திருப்பட்டினம் கோட்டுச்சேரி உள்ளிட்ட கோயில்களில் நேற்று அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனால் நேற்று விடுமுறை நாட்கள் என்பதால் பக்தர்கள் பல்வேறு பகுதியிலிருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மேலும் அனைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.