பதிவு செய்த நாள்
02
ஜன
2020
04:01
கோவை: பாப்பநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள, சீனிவாச பெருமாள் கோவிலில், நாளை அதிகாலை ஆண்டாள் அருளிய திருப்பாவையின், 18ம் பாடலைபக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.
கோவிலின் சிறப்புஇக்கோவிலில் பத்து அவதாரங்களை கொண்ட பெருமாளுக்கு, ஆண்டு முழுக்க தவறாமல் உற்சவங்கள் நடைபெறுகின்றன. வேண்டுதல்களுக்கு வரம் அளிக்கும் பெருமாள் இவர் என்பதால், சுற்றுப்பகுதியில் இக்கோவில் மிகவும் பிரசித்தம்.மார்கழி மாதத்தையொட்டி இக்கோவிலில் நாளை, அதிகாலையில், உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்... என்று துவங்கும் திருப்பாவை பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர். பாடலின் பொருள்மதநீர் பெருகும் பெரிய யானையின் பலமும், எதிரிகளை கண்டு என்றும் அஞ்சாத, தோள் வலிமையும் வாய்ந்த, நந்தகோபனுடைய மருமகள் நப்பின்னை. அவள் மணமிகுந்த அழகிய கூந்தலும், பந்து விளையாடும் அழகிய கைகளும் அமையப்பெற்றவள். அவளை அழைத்த பெண்கள், நப்பின்னாய்... காலை நேரத்தில் கோழிகள் எங்கும் கூவுகின்றன. குருக்கத்திச் செடிகள் படர்ந்த பந்தல் மேல் குயில்களும் கூவுகின்றன. உன் கணவனான கண்ணபிரானது திருநாமங்களை பாடும் எங்களுடன் சேர்ந்து, நீயும் மகிழ்ந்து பாடுவாயாக. கைவளை குலுங்க, செந்தாமரை பூப்போன்ற உன் கைகளால், உன் கதவைத்திறப்பாய் என்று நப்பின்னையை அழைக்கின்றனர் பெண்கள், என்பதே இப்பாடலின் பொருள்.