வாதானூர் பெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2020 03:01
திருக்கனுார்:வாதானுார் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா நாளை நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த வாதானுார் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 6ம் ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு விழா நாளை 6ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, இன்று 5ம் தேதி இரவு 7:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், மகா தீபாராதனையும், இரவு 9:00 மணிக்கு வைகுந்த வாச அலங்காரத்துடன், சுவாமி திரை மூடப்படுகிறது. தொடர்ந்து, முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை 6ம் தேதி காலை 4:30 மணிக்கு மூலவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், 5:00 மணி அளவில் சொக்க வாசல் (பரமபத வாசல்) திறப்பு விழா நடக்கிறது.மாலை 6:00 மணிக்கு பாமா ருக்மணி சமேத வேணுகோபால் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது.