செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நடந்த வைகுண்ட ஏகாதசி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு சிறப்பாக நடந்தது. இதை முன்னிட்டு 5ம் தேதி இரவு மூலவருக்கு தைலக் காப்பு செய்தனர். அதிகாலை ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனமும் 5 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. தொடர்ந்து 5 .40 மணிக்கு ரங்கநாதர் முத்தங்கி அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சி தந்தார். கூடியிருந்த பக்தர்கள் ஸ்ரீ ரங்கா கோவிந்தா சரண கோஷத்துடன் ரங்கநாதரை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு கோயில் உள்பிரகாரம் களில் மலர் அலங்காரம் ரங்கநாதர் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரமும் செய்து இருந்தனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதமும், அன்னதானமும் வழங்கினர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் செஞ்சியில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கினர்.