மதுரை கூடலழகர் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2020 07:01
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர் க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர்.
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு (ஜன.,6) காலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். 3.30 மணிக்கு வைகுண்ட நாதர் திருக்கோலத்தில் விஸ்வரூப தரிசனம், மதியம் 2.30 மணிக்கு அலங்கார திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு பெருமாள் ஆடி வீதி சுற்றி வந்து இரவு 7.15 மணிக்கு சொர்க்கவாசல் வழியாக வெளியே நம்மாழ்வாருக்கு தரிசனம் தந்து அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பெருமாளை தரிசனம் செய்தனர்.