பதிவு செய்த நாள்
07
ஜன
2020
11:01
கரூர், அபய பிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த, 27ல் பகல் பத்து உற்சவத்துடன் துவங்கியது. நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு மோகினி அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அதேபோல், கரூர் பண்டரிநாதன் சுவாமி பஜனை மடத்திலும், சொர்க்க வாசல் திறப்பு விழா, நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு நடந்தது.
கிருஷ்ணராயபுரம், லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலையில் சொர்க்க வாசல் வழியாக வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.