செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2020 12:01
செஞ்சி: செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. செஞ்சிக்கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும். சிறப்பு அலங்காரம் செய்தனர்.
காலை 11 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணர் சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார். தொடர்ந்து பஜனைக் கோஷ்டியினர் மற்றும் பக்தர்கள் சூழ வெங்கட்ரமணர் கோவிலில் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்