சபரிமலை: சபரிமலையில் தினமும் இரண்டு லட்சம் டின் அரவணையும், 80 ஆயிரம் பாக்கெட் அப்பமும் விற்பனையாகிறது.
மகரவிளக்கு சீசனில் நடை திறந்தது முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நிலக்கல் மற்றும் பம்பையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு, சீரான இடைவெளியில் அனுப்பப்படுகின்றனர். 18-ம் படியேறுவதற்கு சரங்குத்தியை கடந்து வரிசை உள்ளது. ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களும் சந்திராங்கதன் ரோட்டில் காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போது தினமும் இரண்டு லட்சம் டின் அரவணையும், 80 ஆயிரம் பாக்கெட் அப்பமும் விற்பனை ஆவதாக நிர்வாக அதிகாரி ராஜேந்திரபிரசாத் கூறினார். மகரஜோதிக்கு 15 லட்சம் டின் அரவணையும், இரண்டு லட்சம் பாக்கெட் அப்பமும் தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மண்டல காலத்தில் அரவணை 80.20 கோடி, அப்பம் 11.44 கோடி ரூபாய்க்கு விற்பனையானது.