சபரிமலையில் காட்டுப்பாதைகளில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜன 2020 01:01
சபரிமலை: யானை மிதித்து ஒரு பக்தர் இறந்ததையடுத்து காட்டுப்பாதைகளில் பக்தர்கள் பயணத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பெருவழிப்பாதையில் முக்குழி அருகே கோவையை சேர்ந்த பக்தர் பதிரப்பன் என்பவரை யானை மிதித்து கொன்றது. இதனால் காட்டுப்பாதையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.எருமேலி-பம்பை பெருவழிப்பாதை அடர்ந்த வனப்பகுதி. இங்கு மாலை 5:00 மணிக்கே இருள் சூழ தொடங்கும். எனவே அதற்கு முன்பாக பம்பை சென்று சேரும் வகையில் அழுதையில் இருந்து பக்தர்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பம்பை சென்று சேர முடியாதவர்கள் முக்குழி, கரிமலை, வெள்ளாரம்செற்றை ஆகிய இடங்களில் முகாம்களில் தங்க வேண்டும்.புல்மேடு பாதையில் சத்திரத்தில் இருந்து காலை 6:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் அனுமதித்தால் மாலைக்குள் சன்னிதானம் செல்வதில் சிக்கல் ஏற்படும். இந்த கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.