மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோயில் கார்த்திகை வழிபாடு தருமையாதீன 27ஆவது குருமணிகளோடு திருப்பனந்தாள் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சுவாமிகள் தரிசனம் செய்தார்கள்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் செவ்வாய் பகவான் செல்வ முத்துக்குமார சுவாமி ஆகியோர் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். மார்கழி தனுர் மாத கார்த்திகை திருநாளான இன்று செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திருப்பனந்தாள் காசிவாசி முத்துக்குமாரசுவாமி மற்றும் தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் கலந்து கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு செல்வ முத்துக்குமார சுவாமியை தரிசனம் செய்தனர்.